2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு முன்பாக டயர்கள் எரிப்பு

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 27 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்,  அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு முன்பாக சனிக்கிழமை (26) இரவு இனந்தெரியாதோரால் டயர்கள் போடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக குறித்த பகுதியில் சிறிது நேரம் பதற்றமான நிலைமை ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைதுசெய்யப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X