Suganthini Ratnam / 2016 ஜனவரி 11 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம்.புஹாரி
காட்டுப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட யானைத் தந்தத்தை சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 42 வயதுடைய பெண் ஒருவருக்கு மூதூர் நீதிமன்ற நீதவான் ஜ.என்.றிஸ்வான் 40,000 ரூபாய் அபராதம் இன்று திங்கட்கிழமை விதித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி இப்பெண் கைதுசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிரான வழக்கு மூதூர் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவந்த நிலையில், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தந்தம் யானைத்தந்தமா என்பதை பரிசோதிப்பதற்காக தேசிய மிருகக்காட்சிச்சாலை திணைக்களத்துக்கு அந்த யானைத்தந்தம் அனுப்பி வைக்கப்பட்டது. அது யானைத்தந்தமென்று அத்திணைக்களம் அறிவித்ததை அடுத்து, இப்பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
10 minute ago
18 minute ago
27 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
27 minute ago
39 minute ago