Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
வடமலை ராஜ்குமார் / 2017 ஜூலை 14 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
"தம்பலகாமமத்தில் டெங்கு நோயாளர்கள் 49 பேர் அடையாளம் காணப்பட்டள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் பிரதேச செயலகப்பிரிவில் தான் மிகக் குறைவான டெங்கு நோயாளர்கள் காணப்பட்ட போதும் டெங்கு கட்டுப்பாட்டுத்த மதஸ்தலங்களின் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை" என, தம்பலகாமம் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
தம்பலகாமம் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் பிரதேச செயலகத்தில் இன்று (14)இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், "முள்ளிப்பொத்தானை - 18 பேர், சிராஜ்நகர் - 13 பேர், தம்பலகாமம் - 11 பேர், கல்மிட்டியாவ - 07 பேர் ஆகியோரே இவ்வருடம் பாதிக்கப்பட்டவர்களாவர். மேலும், திருகோணமலை மாவட்டம் முழுவதும் 22 பேர் இறந்துள்ள போதும், தம்பலகாமம் பிரதேசத்தில் எவ்வித இறப்பும் இடம் பெறவில்லை.
டெங்கு நோய் பரவக் கூடிய கூழலை அரச அதிகாரிகள் இராணுவத்தினர் ஆகியோரின் உதவியுடன் தாம் கட்டுப் படுத்திய போதும் தொழில் நிமிர்தமாகவும் சொந்த வேலை காரணமாகவும் கொழும்பு மற்றும் கிண்ணியா பகுதிகளுக்கு சென்று வருபவர்களே டெங்கு நோய்க்கு ஆளாகின்றமை அவதானிக் முடிகிறது.
எனவே இவ்வாறு பாதிக்கப்பட்வர்கள் நுளம்பு வலைகளை பயன்படுத்தவும் காரணம் இவர்களுக்கு குத்திய நுளம்பு இன்னொருவரக்கு குத்தக் கூடாது" எனவும் தெரிவித்தார்.
இக்கூட்டத்துக்கு இணைத் தலைவர்கள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
1 hours ago