2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தாக்குலில் குடும்பஸ்தர் பலி; இருவர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை- மொரவௌ 04ஆம் வாய்க்கால் பகுதியில்,  வியாழக்கிழமை (9) இரவு, குடும்பஸ்தர் ஒருவர், மண்வெட்டி கம்பினால் தாக்கப்பட்டு படுகொலைச் செய்யப்பட்டுள்ளார் என்று, திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில்,  உயிரிழந்தவரின் உறவினர்களான பெண்ணொருவர் உட்பட இருவர், நேற்று (10)  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  

44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபர், குடிபோதையில் வீட்டுக்கு வந்து, தனது சிறிய தாயுடன் சண்டையிட்டுள்ளார் என்றும் இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்களான பெண்ணொருவரும் ஆணொருவரும் குறித்த நபரை, மண்வெட்டி கம்பினால் தாக்கியுள்ளனர் என்றும் தெரியவருகிறது.

தாக்குதலில், மேற்படி நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று தெரியவருகிறது.

பிரேதப் பரிசோதனைக்காக, திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில், சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .