எப். முபாரக் / 2018 ஜூலை 12 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் வைத்து, தாபரிப்பு பணம் செலுத்தாக இருவரை நேற்று முன்தினம் (10) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூர், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நான்கு பிள்ளைகளுக்கு இரண்டு மாதங்களாக 16,000 ரூபாய் தாபரிப்பு பணத்தினை செலுத்ததாத (வயது 31) நல்லூர் பகுதியைச் சேர்ந்த நபரையும், சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு பிள்ளைகளுக்கு நான்கு மாதங்களாக 32,000 ரூபாய் தாபரிப்பு பணத்தை செலுத்தாத (வயது 32) மண்டலபுர, தெஹிவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவரையும் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களை மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .