Editorial / 2020 ஏப்ரல் 05 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டை பகுதி, சந்தனவெட்டை வீதியில், மகனின் தாக்குதலில் தாயொருவர், நேற்றிரவு (04) உயிரிழந்துள்ளாரென, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த பெண், சம்பூர், சீதனவெளி பகுதியைச் சேர்ந்த இராசையா சரோஜாதேவி (57 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த பெண்ணும் அவரது மகன், மருமகள் ஆகியோர் சீதனவெளி பகுதியில் வசித்து வந்த நிலையில், மகனுக்கும் மருமகளுக்கும் இடையில் குடும்பத்தகராறு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், மருமகள், சந்தனவெட்டை, 64ஆம் கட்டையிலுள்ள அவரது தாயாரின் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையில் மீண்டும் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தாயார் இது தொடர்பாக விசாரிப்பதற்காக வீதியால் சென்று கொண்டிருந்த போது, அவரது மகன் எதிரில் வருகைதந்ததாகவும், தகராறு தொடர்பில் கேட்டபோது தாயாரை மகன் அங்கேயே அடித்துக் கொன்றுள்ளதாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலம், மூதூர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்த சம்பூர் பொலிஸார், சம்பவம் தொடர்பில் மகனைக் கைதுசெய்துள்ளனர்.
உயிரிழந்திருந்த தாய்க்கு அருகில் தாக்குதல் நடத்திய மகன் உறங்கிக் கொண்டிருந்ததாக, அயலவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
9 hours ago
17 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
17 Nov 2025