2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

திருகோணமலை கடலில் மிதந்த Target விமானத்தால் பதற்றம்

Freelancer   / 2024 டிசெம்பர் 26 , பி.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை கடலில் சிறிய ரக விமானம் ஒன்று மிதப்பதை கண்ட மீனவர்கள் குழு அதை மீட்டு வந்து அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்..

கரையில் இருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் இந்த சிறிய ரக விமானம் இருந்துள்ளது.

​​இது இலக்கு ஆளில்லா விமானம் (Target drone) என விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் எரந்த கிகனகே தெரிவித்தார்.

இந்த வகை விமானம் 2020 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

விசாரணையில், சுமார் 40 கிலோ எடையுள்ள இதுபோன்ற விமானங்கள் இந்திய விமானப்படையின் பயிற்சி அமர்வுகளில் இலக்குகளாகப் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது.

எனினும் இம்முறை கண்டுபிடிக்கப்பட்ட விமானம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

மேலும் கருத்து தெரிவித்த விமானப்படை பேச்சாளர், விமானம் சேதமடையவில்லை என்றும் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த விமானம் எப்படி வந்தது, ஏன் வந்தது என்று இப்பகுதி மக்களிடையே சற்று  சற்று பதற்றமான நிலை காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X