Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2018 மார்ச் 20 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட் , ஒலுமுதீன் கியாஸ் (அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலையிலுள்ள கன்னியா மற்றும் வில்கம் விகாரை ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் காட்டு யானைகளின் தொல்லையில் இருந்து பாதுகாப்புப் பெறும் பொருட்டு, தமது எல்லைப்பகுதிகளில் மின்சார யானை வேலி அமைத்துத்தரக்கோரி, இன்று (20) நண்பகல் திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் பதாதைகளையும் சுலோகங்களையும் ஏந்திக்கொண்டு, கவன ஈர்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுட்டனர் .
இப்பகுதிகளில் காணப்படும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் மற்றும் தொல்லையினால், இப்பிரதேச மக்கள் பெரிதும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், இக்காட்டு யானைகள் வீடு வாசல்கள், விவசாயப் பயிர்கள் மற்றும் தென்னந்தோட்டங்களையும் அழித்து, நாசப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டனர் .
மேலும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலினால் இரவில் அச்சமின்றி நிம்மதியாக தூங்கக்கூட முடியாதிருப்பதாகவும் கூறுகிறார்கள். இது தொடர்பில் பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இன்னமும் யானை வேலி அமைத்துத்தரப்படவில்லையென இவர்கள் கவலை தெரிவித்தனர்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, இப்பிரதேச மக்கள் மாவட்ட செயலகததிற்கு வெளியே கவன ஈர்ப்பு நடவடிக்கைகளுக்காக பதாதைகளை ஏந்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago