2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

திருகோணமலை மாவட்ட முதியோர் தின நிகழ்வுகள்

Editorial   / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ . அச்சுதன், ஏ.எம்.ஏ.பரீத்

சர்வதேச முதியோர் தினத்தையொட்டி, திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், நேற்று முன்தினம் (10) முதியோர் தின நிகழ்வு நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. அருந்தவராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் -காணி, எம்.ஏ.அனஸ், உதவி மாவட்டச் செயலாளர் என்.பிரதீபன், பிரதம கணக்காளர் கே.பரமேஸ்வரன், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பணியகத்தின் மாவட்ட இணைப்பாளர் ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

நிகழ்வில், பிரதேச முதியோர் சங்கங்களின் பாடல், நடனம், கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் அரங்கேறியதுடன், பரிசளிப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன.

குறிப்பாக சுய தொழில் முயற்சிக்காக மாகாண மட்டத்தில் முதல் இடமும் தேசிய மட்டத்தில் 2ஆவது இடமும் பெற்ற திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட முதியோர் சங்கத்தைச் சேர்ந்த மகாலிங்கம், மாகாண மட்டத்தில் முதலிடம் தேசிய மட்டத்தில் 3ஆம் இடமும் பெற்ற கிண்ணியாக முதியோர் பகல் பராமரிப்பு நிலையம், மாகாண மட்டத்தில் 2ஆவது இடமும் தேசிய மட்டத்தில் 4ஆவது இடமும் பெற்ற கந்தளாய் முதியோர் சங்கம், மாகாண மட்டத்தில் 2வது இடம் பிடித்த சென் யோசப் முதியோர் இல்லம் ஆகியவற்றுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுகள், மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உதவியாளர் ஏ.எல்.இர்பான் ஒருங்கிணைப்பில் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .