Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2017 ஜூலை 08 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கான அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் நடைமுறையிலுள்ள அபிவிருத்தி தொடர்பான கொள்கைகளை உள்ளடக்கியதாக இந்தத் திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.
இதற்காக துறை சார்ந்தோரின் ஒத்துழைப்புகள் பெறப்பட்டுள்ளன.
தற்போது துறை ரீதியான நோக்கம், இலக்குகள் தயாரிக்கும் பணிகள் அந்தந்த துறை சார்ந்தோரின் பங்கெடுப்புடன் நடைபெற்று வருகின்றன.
அத்தோடு, அத்துறையில் காணப்படும் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு அதனை நிவர்த்திப்பதற்கான வழிவகைகளை அடையாளம் காணும் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாராவின் வழிகாட்டலில் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி குகவதனி பரமேஸ்வரன் இதன் ஒருங்கிணைப்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் இதற்கான அனுசரணையை வழங்கியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago