2025 மே 14, புதன்கிழமை

திருகோணமலையில் தேசிய நல்லிணக்கம்

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஜூலை 31 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில், தேசிய நல்லிணக்கத்துக்கான திருகோணமலை மாவட்ட 

நிகழ்ச்சித்திட்டம், திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில், மாவட்ட செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் இன்று(31) நடைபெற்றது.

இலங்கை சமய பாடசாலைக்கல்வி முறையில், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை நிறுவனமயப்படுத்தல், இன, மத பிரதேசம் மற்றும் மொழி போன்று நிலவிவரும் பல்வகைத்தன்மைக்கு மதிப்பளித்து, இலங்கையர் அனைவரும் ஒன்றானவர் என்ற ரீதியில் ஒன்றுபடும் நோக்கில், இந்நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்வின் போது, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான தேசிய பிரகடனமும் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், எம்.எஸ்.தௌபீக், எஸ்.துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாண காணி அமைச்சர் ஆரியவத்தி கலப்பத்தி, மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர் மற்றும் அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .