Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 ஜூலை 17 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
2017ஆம் ஆண்டுக்கான விசேட நிதியொதுக்கீட்டில், திருகோணமலை மாவட்டத்தில் 38 அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக 20 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விவரம் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு கூறினார்.
“திருகோணமலையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டும் செய்யப்படாமலும் இருக்கின்ற பகுதிகளின் அபிவிருத்திப் பணிகளுக்காக மேற்படி நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், “இதற்கமைய, மூதூர், தம்பலகாமம், கந்தளாய், வெருகல், குச்சவெளி, கிண்ணியா, தோப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பாடசாலை அபிவிருத்தி, குழாய் நீர் கிணறுகள், வீதி அபிவிருத்தி என பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன” என அவர் சுட்டிக்காட்டினர்.
திருகோணமலை மாவட்ட மக்கள் பிரநிதிகளின் திட்ட மும்மொழிவுகளுக்கு அமைய இந்த 38 வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
38 minute ago
54 minute ago