2025 மே 14, புதன்கிழமை

திருமலையில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாக தகவல்

Editorial   / 2017 செப்டெம்பர் 01 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாக திருகோணமலை  மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நிமல் பெரேரா தெரிவித்தார்.

போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக தேசிய கொள்கையை வலுப்படுத்துவது தொடர்பாக அரச அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் ஒன்று நேற்று   (31) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்டு  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த வருடத்தில் ஆரம்பம் முதல் ஆகஸ்ட் 31  ஆம்  திகதி வரையான காலப்பகுதிக்குள் 54 கிலோ கிராம் கேரளா கஞ்சாவும்,  66 மில்லிக் கிராம் ஹெரோய்னும்,சட்ட விரோதமான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட 2000 கிலோ கிராம் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

போதைப்  பொருள் பாவனையில், போதை மாத்திரைகளுக்கு அதிகமாக மாணவர்கள் அடிமையாக்கப்பட்டிருக்கின்றார்கள். எனவே இதிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்க வேண்டியது  எமது தலையாய கடமையாகும் என்றார்.

இது தொடர்பில் மாணவர்கள் மத்தியில் மாத்திரமன்றி பெற்​​றோர்களுக்கும் விழிப்புணர்வை  ஏற்படுத்தும் வகையில்  போதைப் பொருள் ஒழிப்பு முன்னோடி.நடவடிக்கைகள் அமைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில்  மதத் தலைவர்கள் , பிரதேச  செயலாளர்கள் ,  பொலிஸ் , படை மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X