Editorial / 2019 மே 19 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலையில் சிறியரக கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு, திருகோணமலை நீதிமன்றம், இன்று (19) கட்டளையிட்டுள்ளது.
மேற்படிப் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயது நபரே, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
திருகோணமலை கன்னியா- மாங்காயூற்று பகுதியில், முப்படையின் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, சிறிய ரக துப்பாக்கி, 35க்கும் மேற்பட்ட அலைபேசிகள், சிம் அட்டைகள் என்பவற்றுடன் மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டார்.
குறித்த நபர் டெலோ அமைப்பின் உறுப்பினராக இருந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. எனவே, அவர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டி உள்ளதால், தடுத்து வைத்து விசாரிப்பதற்கு, நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்று, உப்புவெளி பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கையை முன்வைத்தனர்.
இதனைக் கருத்திற்கொண்ட திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேல், குறித்த நபரை 72 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
7 minute ago
22 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 minute ago
54 minute ago
1 hours ago