Editorial / 2020 ஏப்ரல் 18 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம், கதிரவன்
தேசிய பாதுகாப்புக்கு சவாலாக அமைகின்ற எந்தவொரு செயற்பாட்டையும் செய்வதற்கு ஒரு போதும் பின்நிற்கப் போவதில்லை என்றும் அவற்றைத் துணிச்சலோடு தயார்கொள்ள முப்படை உட்பட பொலிஸார் தயாராக இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் 22ஆவது படைப்பிரிவில் நேற்று (17) நடைபெற்ற நிகழ்வொன்றில் விசேட அதிதியாக கலந்துகொண்டபோது, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் பரவிய போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனவரி 26ஆம் திகதி விசேட கூட்டமொன்றை இதுதொடர்பில் நடத்தி, அன்றைய தினமே கொரோனா தொடர்பான குழுவொன்றை ஏற்படுத்தியதாகவும் அந்தக் குழுவை நியமித்து ஒரு நாளின் பின்னர் சீன நாட்டுப் பிரஜை ஒருவர் முதலாவதாக அடையாளம் காணப்பட்டதாகவும் அதன் பின்னர் இந்நோயில் இருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வலுவான பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“அபிவிருத்தி அடைந்த நாடுகள், இன்று கொரோனாவிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகிய எமது நாடு அதற்கெதிரான செயற்பாடுகளில் பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
“இதனால் எமது நாடு, ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றது. இதற்கு அரசாங்கம், சுகாதாரத்துறை, பாதுகாப்பு அமைச்சு உட்பட பல நிறுவனங்கள் ஒருங்கிணைந்து தமது சேவையை அர்ப்பணிப்புடன் செய்தமை மூல காரணமாகும்.
பாதுகாப்பு அமைச்சுக்கு எவ்வாறு கொரோனாவை ஒழிக்க முடியும் என்று சில சக்திகள் கேட்டதாகவும் சுகாதாரத்துறை மருத்துவ வசதிகளை வழங்கிய போதும் அதனோடு தொடர்புடைய இணைந்த சேவைகளை வழங்க கொரோனா நோயாளிகள் தொடர்பான விவரங்களை கண்டறிய அவர்களது பின்னூட்டல் செயற்பாடுகள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு தமது ஒத்துழைப்பை பாரியளவில் வழங்கியமை மிக முக்கியமானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago