2025 மே 14, புதன்கிழமை

தேன் எடுக்கச் சென்றவர் கரடியின் தாக்குதலில் படுகாயம்

எப். முபாரக்   / 2017 ஜூலை 27 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்கஸ்வெவ காட்டுப் பகுதியில், தேன் எடுக்கச் சென்ற நபரொருவர், கரடியின் தாக்குதலுக்கு உள்ளாகி, பலத்த காயங்களுடன், கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

அக்போபுர பகுதியைச் சேர்ந்த எல்.டப்ளியூ சோமரத்தின பண்டார (வயது 48) என்பவரே, கரடித் தாக்குதலுக்குள்ளானவராவார்.

குறித்த நபர், தேன் எடுப்பதற்காக நேற்றுக் (26) காட்டுக்குள் சென்றுள்ளார்.

அப்போது, மரப்பொந்து ஒன்றுக்குள் தேன் இருப்பதை இனங்கண்டு, அம்மரத்தை வெட்ட ஆரம்பித்த போது, குறித்த அப்பொந்துக்குள்ளிருந்து திடீரென வெளியேறிய கரடியொன்று, அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், அவ்வழியாக விறகு எடுக்கச் சென்ற சிலரால் குறித்த நபர் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .