Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 24 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், அப்துல்சலாம் யாசீம்
“தேர்தல்களைப் பிற்போடுவது அரசாங்கத்துக்குப் பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்” என, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று மாலை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். காலதாமதப்படுத்துவதால், மக்களிடையே பாரிய எதிர்ப்பலைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
“முதலில் இவ்வருட நடுப்பகுதியில் எனவும் பின்னர் வருட இறுதியில் தேர்தலை நடத்துவதாகவும் கூறப்பட்டு, பின்னர் ஜனவாரி மாத முற்பகுதியில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு, தற்போது மேலும் காலதாமதம் ஆகலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
“உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டு, இரண்டு வருடங்களுக்கு மேலாகின்றன. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், தற்போது மக்கள் மத்தியில் அரசாங்கம் மீதான தவறான அபிப்பிராயத்தை வளர்ப்பதற்கு இது ஒரு பிரதான காரணமாக அமைந்துள்ளது.
“ஆகவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலைக் காலதாமதப்படுத்தாமல் எதிர்வரும் ஜனவாரி மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.
“அத்துடன், அரசாங்கம் ஏற்கெனவே குறிப்பிட்டது போல மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் நடத்துவதற்கு முன்வர வேண்டும்.
“இதன்மூலம் மக்களின் ஆதரவை அரசாங்கம் மேலும் பெற்றுக்கொள்ள முடியும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago