Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
மூதூர் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பத்து வீட்டுத் திட்ட மீள்குடியேற்ற கிராமத்துக்கு வருகை தந்த திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், கிராம மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள்,தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.இங்கு, மின்சாரம், குடிநீர், வாழ்வாதாரம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் எட்டு மாதங்கள் கடந்தும் இன்னும் தமது மக்களுக்கு ஏற்படுத்தித் தரப்படவில்லையென நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டனர்.
இதனை கேட்டறிந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் மிக விரைவில் பத்து வீட்டுத் திட்ட மீள்குடியேற்ற கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், ஆர்.பிரேமதாசவினால் உருவாக்கப்பட்ட இக்கிராமத்திற்கு அவரது புதல்வரான அமைச்சர் சஜீத் பிரேமதாசவை அழைத்து வந்து சகல வசதிகளை ஏற்படுத்தித் தர நடவடிக்கை மேற்கொள்வேன் எனவும் தெரிவித்தார்.
இச் சந்திப்பில் கிண்ணியா நகரபிதா எம்.நளீம்,மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் எம்.தாஜுதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .