2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

நீதிமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2016 நவம்பர் 05 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

வழக்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, நீதிமன்றச் சொத்துக்களை அடித்து உதைத்து சேதப்படுத்தியது மாத்திரமல்லாமல், சிறைச்சாலைப் பாதுகாவலரையும் தாக்கிய நபரை இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மூதூர் நீதவான் ஐ.என்.றிஸ்வான், நேற்று வெள்ளிக்கிழமை (04) உத்தரவிட்டார்.

மூதூர் பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே, இவ்வாறு நடந்துகொண்டுள்ளார். அவரை, திருகோணமலை வைத்தியசாலையில் மனநல பரிசோதனை செய்து, நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

குறித்தநபர் மனைவி பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கான குடும்ப பராமரிப்பு பணத்தை நீண்ட நாட்களாக செலுத்தாது தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவரை மூதூர் பொலிஸார், வியாழக்கிழமை (03) கைது செய்து மூதூர் நீதிமன்றத்தில்  நேற்று (04) ஆஜர்படுத்தியபோது, நீதிமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டமையினால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X