2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

நீர்ச்சுத்திகரிப்புக் கருவிகள் வழங்கி வைப்பு

Thipaan   / 2016 நவம்பர் 08 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மஹதிவுல்வெவ  பிரதேச வைத்தியசாலை மற்றும் பன்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் என்பவற்றுக்கு, நீர்ச்சுத்திகரிப்புக் கருவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேயின் தனிப்பட்ட செயலாளரால், நேற்று (07) மாலை 4 மணியளவில் இந்த நீர்த்தாங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று போது, தமக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கப்பெறுவதில்லையென நோயாளர்கள் விடுத்த வேண்டுகோளையடுத்து, பிரதேசத்திலுள்ள இரண்டு வைத்தியசாலைகளுக்கும் பிரதியமைச்சரின் நிதியொதுக்கீட்டில் வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை, பன்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் புனரமைப்பு பணிகளை கூடிய விரைவில் முடிப்பதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் தெரிவித்ததுடன், பன்குளம் வைத்தியதிகாரி போல் ரொஷானிடம், சுத்திகரிப்புக் கருவிகளை வழங்கி வைத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X