Suganthini Ratnam / 2016 மார்ச் 13 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நெல் மூடைகள் திடீரெனச் சரிந்து விழுந்ததில் மூச்சுத்திணறலுக்கு உள்ளான ஒருவர் கந்தளாய் தள வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எம்.ரனிஸ் (வயது 24) என்பவரே பாதிக்கப்பட்டவர் ஆவார்.
தற்போது கந்தளாய் பிரதேசத்தில் நெல் அறுவடை மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில், வயல்வெளியில் வைத்து கொள்வனவு செய்யப்பட்ட நெல் மூடைகளை லொறியில் ஏற்றிக்கொண்டிருந்த ரனிஸின்; மீது விழுந்துள்ளது.
இச்சம்பவம் பற்றி விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர.;
10 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
26 minute ago