Thipaan / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக, நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தோப்பூர் பிராந்திய காரியாலயத்துக்குட்பட்ட பகுதிகளில், நாளொன்றுக்கு நான்கு மணித்தியாலங்கள் மாத்திரமே நீர் விநியோகம் செய்யப்படுமென, தோப்பூர் பிராந்திய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய காரியாலய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன்படி, காலை 6 தொடக்கம் 8 மணிவரையும் மாலை 6 தொடக்கம் 8 மணி வரை நீர் விநியோகம் செய்யப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
இதனால் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தோப்பூர் பிராந்திய காரியாலயத்துக்குட்பட்ட தோப்பூர், கிளிவெட்டி, மல்லிகைத்தீவு, பட்டித்திடல், பள்ளிக்குடியிருப்பு, அல்லைநகர் பகுதி மக்கள் மேற்படி நீர்விநியோக கால அட்டவணையை பயன்படுத்தி நீரினை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago