Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 09 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீஷான் அஹமட்,எப்.முபாரக்
கிண்ணியா நகரசபை மற்றும் பிரதேச சபை எல்லைகள் மறுசீரமைக்கப்படவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்று(09) தெரிவித்தார்.
அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த பல மாதங்களாக நான் மேற்கொண்டு வந்த தொடர் நடவடிக்கைகளின் பயனாக, கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை எல்லைகளை மறுசீரமைக்கப்பட இருக்கின்றது.
கிண்ணி
எனினும், நகரசபை சுமார் 9 சதுர கிலோமீற்றர் பரப்பளவினுள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனால் நகர சபைப் பகுதியில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள அரச காணிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் எதிர்காலத்தில் பாரிய சிக்கல்கள் தோற்றக்கூடும்.
எனவே, இந்த சிக்கல்களை நிவர்த்தி செய்ய, இரு சபைகளின் எல்லையில் இருக்கும் உப்பாறு கிராம உத்தியோகத்தர் பிரிவை, இரண்டாகப் பிரித்து அதன் ஒரு பகுதியை கிண்ணியா நகர சபையின் எல்லையுடன் இணைக்க வேண்டும். உப்பாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு பெருமளவு நிலப்பரப்பைக் கொண்டுள்ளமையால் இது சாத்தியமாகும்.
ஆதலால், இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு, பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களில் அனுமதியைப்பெற்று, அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை அமைச்சர் பைசல் முஸ்தபாவுடன் கலந்துரையாடி, உடனடியாக இதை நிறைவேற்றி தருமாறு கோரிக்கை விடுத்தேன்.
அதன்பயனாக , அமைச்சர் திருகோணமலை மாவட்ட செயலாளருக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய, இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பல வருடகாலமாக எமது மக்களின் முக்கிய கோரிக்கையாக காணப்பட்டு வந்த, கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் எல்லைகளின் மறுசீரமைப்பு மிக விரைவில் செயலுருவம் பெறும் என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago