Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மே 19 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக்
விவசாயிகளுக்கு இரசாயன உரங்களை அறிமுகப்படுத்தும் போது, எந்தவோர் அழுத்தத்துக்கும் பணத்துக்கும் அடிபணிய வேண்டாமென்று, கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத், விவசாய அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதுபோன்ற அழுத்தங்களுக்கு அதிகாரிகள் உட்படுவது, குழந்தைகளுக்கு விஷம் கொடுப்பது போன்றாகும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
நச்சுத்தன்மையற்ற உரங்களைப் பயிரிடுவதை மய்யமாகக் கொண்ட 'தியாட்டா கிருலாவா' திட்டத்தின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கந்தளாய் பகுதியில் 500 ஏக்கர் உர மாதிரி நெல் வயலில் ஆய்வு சுற்றுப்பயணத்தில் நேற்று (18) ஆளுநர் பங்கேற்றார்.
அதன் பின்னர் கருத்துரைத்த ஆளுநர், “வேளாண்மைத் துறையில் தலையிட்டு, விவசாயிகளை, இரசாயன பாவனையற்ற நிலைக்குக் கொண்டு வர வேண்டும். அறியாமையால் தான் விவசாயிகள் இரசாயன உரங்களைத் தேடிக் கடைகளுக்குச் செல்கிறார்கள்.
“கிழக்கு மாகாணத்தில், சட்டவிரோத பூச்சிக்கொல்லிகளை அகற்றத் தேவையான முடிவுகளை நாங்கள் எடுக்கிறோம். இதுபோன்ற கடைகள் ஏதேனும் இருந்தால், உடனடியாக போலிஸாருக்குத் தெரியப்படுத்துங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025