Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜூன் 24 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன், ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக், கீத், கதிரவன்
திருகோணமலை நகர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள சகல நடைபாதை வியாபார செயற்பாடுகளும் ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் நிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, திருகோணமலை மாவட்டச் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.
மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமையவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்ப காலம் தொட்டு நடைபாதை வியாபாரம் மேற்கொள்வோரும் பருவகால நடைபாதை வியாபார செயற்பாடுகளை மேற்கொள்வோரும் அவர்களது வியாபார நடவடிக்கைகளை ஏதோவொரு முறைப்படுத்தலில் செய்வதற்கான ஒழுங்குமுறைகள் எடுக்கப்படல் இன்றியமையாதது என்றும் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
உரிய நிறுவனங்கள் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, கொவிட்19 காலப் பகுதியில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் வகையில், பொதுச் சந்தையின் செயற்பாடுகளைப் பரவலாக மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. எனவே, பலர் பாதையோரங்களான நடைபாதைகளிலும் வியாபார செயற்பாடுகளை மேற்கொண்டனர். இதனால் மக்கள் பொருள்களை இலகுவாக கொள்வனவு செய்யக்கூடியதாக இருந்தது.
எனினும், தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு, நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளமையால், தற்காலிகமாகச் செயற்பட அனுமதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரச் செயற்பாடுகள் நிறுத்துவதாக, மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
17 May 2025
17 May 2025