Thipaan / 2016 ஜூன் 01 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் நகரில், நெல்சிப் திட்டத்தின் 72 இலட்சம் ரூபாய் நிதியில், நவீன வசதிகளுடன் சிறுவர் பூங்கா நிர்மாணிக்கப்பட்டு வருவதாக கந்தளாய் பிரதேச செயலாளர் எச். டபிள்யூ. பிரேமதாஸ தெரிவித்தார்.
கந்தளாய் பிரதேசத்தில் பாரிய குறைபாடாகக் காணப்பட்ட சிறுவர் பூங்கா, நெல்சிப் திட்டத்தின் மூலம் அமைக்கப்படுவதால், அக்குறைபாடு இல்லாமல் செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
கந்தளாய் நகரிலுள்ள சிறார்கள் மட்டுமன்றி, அனைவரும் இப்பூங்;காவைப் பயன்படுத்த முடியும் எனக் குறிப்பிட்ட அவர், நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இச்சிறுவர் பூங்காவின் நிர்மாணப்பணிகளை, இவ்வருட இறுதிக்குள் நிறைவுசெய்ய வேண்டியுள்ளதாகவும் சுற்றுப்புறச் சூழலும் இதன் மூலம் அழகுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
54 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
4 hours ago
4 hours ago