Editorial / 2019 ஜூன் 05 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை-ரொட்டவெவ மஸ்ஜிதுல் ஹுதா ஜூம்மா பெரிய பள்ளிவாயலில் நோன்பு பெருநாள் தொழுகை இன்று காலை ஆரம்பமானது.
பள்ளிவாயலுக்கு முன்னாள் இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கியதுடன், கிராம மக்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
ரொட்டவெவ மஸ்ஜிதுல் ஹுதா ஜூம்மா பள்ளிவாயல் பேஷ் இமாம் என். நஸார்தீன் மௌலவியால் பிரசங்கம் நிகழ்த்தப்பட்டதுடன், அனைவரும் இன ஒற்றுமைக்காகவும் நல்லிணக்கத்துக்காகவும் பாடுபட வேண்டும் எனவும், துஆ பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் நாட்டில் சமாதானம், சுபீட்சமான எதிர்காலம் மலர வேண்டும் எனவும் விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

33 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago