Janu / 2025 பெப்ரவரி 11 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, இறக்கக் கண்டி பகுதியில் நான்கு வலம் புரி சங்குகளுடன் செவ்வாய்க்கிழமை (11) அன்று மூவர் கைது செய்யப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
குறித்த சங்குகளின் மொத்த பெறுமதி நான்கு கோடியே 75 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் குறித்த சங்குகள் கடலில் கண்டெடுக்கப்பட்டதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
வவுனியா மற்றும் இறக்கக் கண்டி பகுதிகளை சேர்ந்த 33,39,மற்றும் 45 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர் .
இவர்கள் மூவரையும் ரூபாய் 05 இலட்சம் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25) அன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
16 minute ago
25 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
26 minute ago