2025 மே 01, வியாழக்கிழமை

நாய்க்கடிக்குள்ளான மாணவி வைத்தியசாலையில்

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்  


தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி   மாணவி நேற்றுக் கல்லூரிக்குச் செல்லும் வழியில் (21)  விசர்நாய்க்காடிக்குள்ளாகி  மூதூர் தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 இதேவேளை, தோப்பூர் இக்பால்நகர் பிரதேசத்தில் விசர்நாய்க்கடிக்குள்ளாகிய ஏழு பேர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும்  சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 
 அண்மைக்காலமாக தோப்பூர் பிரதேசத்தில் விசர்நாய்க்கடிக்குள்ளாகுவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையால்  பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள் மற்றும் பாதசாரிகள் வீதியால் அச்சத்துடனே பயணம் செய்கின்றனர். எனவே இதற்குப்பொறுப்பான அதிகாரிகள் இப்பிரதேசத்திலுள்ள விசர்நாய்களை கட்டுப்படுத்தி மக்களது அச்சத்தைப்போக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .