2025 மே 06, செவ்வாய்க்கிழமை

நிதிமன்றிற்குள் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஜூலை 12 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, நீதிமன்றத்திற்குள் கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற இளைஞர் ஒருவரை  இன்று (12)  நீதிமன்ற பொலிஸார் கைது செய்து துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தனர்.

சந்தேக நபர், கிண்ணியா, குறிஞ்சாங்கேணி பகுதியைச் சேர்ந்த (வயது 21) எனவும், அவரிடமிருந்து 700 மில்லி கிராம் கேரள கஞ்வை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்றிற்குள், வழக்கிற்கு வருகை தந்திருந்த சந்தேக நபர் மூன்று தடவைக்கு மேல் நீதிமன்றத்திற்கு உள்ளே சென்று வந்த​போது சந்தேகத்தின் பேரில் பொலிஸார் அவரை சோதனையிட்ட போதே, கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை,  துறைமுக பொலிஸில் தடுத்து வைத்துள்ளதுடன், நாளை(13) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X