அப்துல்சலாம் யாசீம் / 2018 பெப்ரவரி 28 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகள் நியமனத்தில், எவ்வித அநீதியும் இழைக்கப்படவில்லையென, கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, “நான் அறிந்தவரை, நியமனத்தில் அநீதிகள் இடம்பெறவில்லை. நீதியின் பக்கமே நான் நிற்கின்றேன். அதனால் நியமனம் வழங்கும் விடயத்தில், யாரும் அதிருப்தியடையத் தேவையில்லை.
“கிழக்கு மாகாண சபையால், 2017ஆம் ஆண்டு 1,440 பேருக்கு நியமனம் வழங்குவதற்கு அனுமதி கிடைத்தது. அதில் தமிழ்மொழி மூலமாக 1,050 பேருக்கு அனுமதி கிடைத்ததுடன், சிங்கள மொழியில் 390 பேருக்கு நியமனம் வழங்க அனுமதி கிடைத்தது.
“இதில் முதற்கட்டமாக 958 பேருக்கு, தமிழ்மொழி மூலமாக நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சிங்கள மொழியில் 169 பேருக்கும், மொத்தமாக 1,127 பேருக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
“இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக, எதிர்வரும் 3ஆம் திகதி, சிங்கள மொழி மூலமாக 222 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதுடன், தமிழ் மொழி மூலமாக 91 பேருக்கு என, மொத்தமாக 313 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது.
“ஒன்பதாம் இடத்தில் காணப்படும் கிழக்கு மாகாண கல்வித்துறையை மேம்படுத்தும் நோக்கிலே, அதிகளவில் பற்றாக்குறையாகக் காணப்படும் பாடசாலைகளுக்கே, இந்நியமனங்கள் வழங்கப்படுகின்றன” என்றார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago