2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

நிழல்பிரதி இயந்திரம் வழங்கிவைப்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்துக்கு, கிழக்கு மாகாண ஆளுநரின் நிதியுதவியில், நிழல்பிரதி இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டது.

பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கையையடுத்து, கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வாவால், ஆளுநர் அலுவலகத்தில் வைத்து நேற்று (18) கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல். ஏ.அஸீஸ், கல்வியமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்துபண்டா, பாடசாலை அதிபர் ஆர்.சரத் சேன சிங்க, பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் செயலாளர் ஜீ.ஜீ.எச்.பிரசன்ன குமார, மாணவர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .