Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
ஏ.எம்.ஏ.பரீத் / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா எழுத்தாளர்களுடைய நூல்களைக் காட்சிப்படுத்தலும் விற்பனை செய்தலும், செப்டெம்பர் மாத முதல் பகுதியில் நடை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை, மத்திய கலாசாரத் திணைக்களத்தின் அனுசரணையுடன், கிண்ணியா பிரதேச செயலக கலாசாரப் பிரிவினரும் கலாசார அதிகார சபையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே, பிரதேச சகல எழுத்தாளர்களும் தங்களால் வெளியிடப்பட்ட சகல நூல்களையும் இம்மாத இறுதிப் பகுதிக்குள் பிரதேச செயலக கலாசாரப் பிரிவில் ஒப்டைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
இந்தக் கண்காட்சி, கிண்ணியா பிரதேச செயலகத்தின் முன்னால் உள்ள பிரதான வீதி அருகாமையில் நடைபெறுமெனவும் திகதிகள் சகல எழுத்தாளர்களுக்கும் பின்னர் அறிவிக்கப்படுமெனவும், கலாசாரப் பிரிவு உத்தியோகததர் ஜே.எம். ஹில்மி தெரிவித்தார்.
மேலதிக விவரங்களுக்கு கிண்ணியா பிரதேச கலாசார உத்தியோகத்தரின் 0775025625 என்ற அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago