2025 மே 17, சனிக்கிழமை

பெண்கள் மூவருக்கும் சாரதிக்கும் விளக்கமறியல்

Thipaan   / 2016 நவம்பர் 11 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்

திருகோணமலை மாவட்டத்தின்  தம்பலகாமம்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியிலுள்ள கடைகளில் பொருட்களைத் திருடிய பெண்கள் மூவரையும் முச்சக்கரவண்டிச் சாரதியையும், எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சானிஜா பெரேரா, நேற்று வியாழக்கிழமை (10) உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக,பெண்கள் நாடாத்தி வந்த கடையில் பொருட்களைக் கொள்வனவு செய்வது  போல் பாசாங்கு செய்து, ஒருவர்  கதைத்துக் கொண்டு இருக்கும் போது, மற்றவர் முச்சக்கரவண்டியில் பொருட்களை ஏற்றிக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

அவர்களை, பொதுமக்கள் ஒன்று திரண்டு  துரத்தி சென்று  பிடிக்க முயன்றபோதும், அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர், வீதிப் போக்குவரத்து  பொலிஸாரின் உதவியை நாடி மூவரையும் கைதுசெய்த பொலிஸார், முச்சக்கரவண்டிச் சாரதியையும் கைதுசெய்துள்ளனர்.

இவர்களை, நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்திய போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .