2025 ஜூலை 23, புதன்கிழமை

பெண்ணின் தங்க ஆபரணத்தை அறுத்தவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

கன்தளாய் ஆரியவங்ச மாவத்தையில் பெண்ணொருவரின் தங்க ஆபரணத்தை அறுத்து விட்டு, முச்சக்கர வண்டியில் தப்பியோடிய இரண்டு பேரில் 28 வயதுடைய ஒருவரை, எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் டி.சரவணறாஜா, புதன்கிழமை (28) உத்தரவிட்டார்.

குறித்த ஆபரண அபகரிப்பின் போது, பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றைய இருவரையும் தலைமையகப் பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

செவ்வாய்கிழமை (27) இரவு 8.30க்கு, முச்சக்கர வண்டியில் சென்ற மூவர், ஆரியவங்ச மாவத்தையில் வைத்து, குறித்த பெண்ணின் தங்க ஆபரணத்தை அறுத்து விட்டு, பொலிஸார் நிறுத்திய போதும் நிறுத்தாமல் சென்ற வேளை, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட 29 வயதுடைய மற்றைய நபர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .