2025 ஜூலை 31, வியாழக்கிழமை

பிணையில் வந்தவர் வாள்வெட்டில் பலி

Princiya Dixci   / 2016 ஜூலை 07 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம், தீசான் அஹமட்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் ஆஸாத் நகர் மீரா தைக்காப் பள்ளிவாசலில் வைத்து 03 பேர் கொண்ட குழுவினால் ஆஸாத் நகர் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுத் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று வியாழக்கிழமை (07) காலை 06 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிர் இழந்தவர், கே.எம்.நாஸ்கீன் (வயது 39) எனத் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர், அவரது மைத்துனரைக் கட்டுத் துவக்கினால் சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் மூதூர் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு மூன்று மாதத்துக்கு முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையிலையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .