Niroshini / 2016 மார்ச் 14 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் பிணைக்கு கையொப்பம் இட்ட நபரை இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி.சரவணராசா இன்று திங்கட்கிழமை (14) உத்தரவிட்டார்.
கிண்ணியா 03, மஹ்ரூப் நகர், பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனது சகோதரன் ஒருவருக்கு ஒரு இலட்சத்து மூவாயிரம் ரூபாய் தாபரிப்பு பணமாக செலுத்த வேண்டிய வழக்கொன்றுக்கே பிணையாளராக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வழக்கின் சந்தேக நபர் பல வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காததால் பிணையாளரை ஞாயிற்றுக்கிழமை (13) மாலை கைது செய்து, இன்று (14) திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் பற்றிய விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
11 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
27 minute ago