Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 14 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
சர்வதேச இளைஞர் அபிவிருத்திப் பிரிவு மற்றும் இந்திய மத்திய அரசின் ஏற்பாட்டில் எதிர்வரும் 16ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை, புதுடெல்லியில் நடைபெறவுள்ள இளைஞர்களின் அபிவிருத்தி, கல்வி, கலை மற்றும் கலாசாரம் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் மற்றும் சர்வதேச பரிமாற்றுத் திட்டத்துக்காக, இலங்கை சார்பான பிரதிநிதிகளுடன் மூதூரைச் சேர்ந்த ஏ.எம்.சர்ஜுன் பங்கேற்கவுள்ளதாக மூதூர் இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.டீ.முபாரிஸ் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் தெற்காசிய இளைஞர்களின் தொடர்பு மற்றும் அவர்களுடனான இலங்கை இளைஞர்களின் முன்னேற்றம் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதுடன், இந்திய - இலங்கை இளைஞர்களின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.
இவர் பொதுநலவாய இளைஞர் பேரவையின் உறுப்பினரும் ஐக்கிய நாடுகள் தன்னார்வத் தொண்டர் அமைப்பின் பிரதிநிதியுமாவார்.
கடந்தாண்டுகளில் நடைபெற்ற பொதுநலவாய மற்றும் உலக இளைஞர் மாநாட்டில், இலங்கை இளைஞர் நாடாளுமன்றம் சார்பான பிரதிநியாகவும் இவர் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
12 minute ago
17 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
2 hours ago