2026 மார்ச் 23, திங்கட்கிழமை

புதிய அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியையொட்டி விஷேட வைபவங்கள்

Thipaan   / 2016 ஜனவரி 09 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

புதிய அரசாங்கத்தின் ஒரு வருட பூர்த்தியையொட்டி, கிண்ணியா ஹிஜ்ரா பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமை(08) விசேட வைபவங்கள் இடம்பெற்றன.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான அப்துல்லா மகரூப் தலைமையில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் நல்லாசி வேண்டி பிராத்தனைகள் இடம்பெற்றன.

திருகோணமலை மாவட்ட செயலாளர் என்.புஸ்பகுமார,கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ், கிண்ணியா மஸ்லிஸ் அஸ் சூராத் தலைவர் எம்.ஏ.ஹிதாயத்துள்ளா ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .