Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 நவம்பர் 07 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர், பாம்புக் கடிக்கு உள்ளாகி, கந்தளாய் தள வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்;சைபெற்று வருவதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சேருநுவர, கல்லாறு பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஒருவரே, இதில் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (06) இரவு, உறங்கத்திலிருந்த குறித்த நபர் மீது, வீட்டின் கூரையிலிருந்த பாம்பு விழுந்து, கடித்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாம்புக்கடிக்குள்ளான நபர், முதலில் சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக, கந்தளாய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .