Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2016 ஜூலை 12 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
பிரேசிலின் இலங்கைக்கான பதில் தூதுவர் டவினோ சேனாவுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கும் இடையிலான சந்திப்பு, கிழக்கு மாகாண முதலமைச்சர் பணிமனையில், நேற்றுத் திங்கட்கிழமை (11) மாலை இடம்பெற்றது.
இதன்போது, கிழக்கு மாகாணத்துக்கான முதலீடுகள் தொடர்பிலும், எதிர்காலத்தில், திருகோணமலை மாவட்டத்தில் செய்யப்பட இருக்கின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் புதிதாக ஒரு சீனித் தொழிற்சாலையை நிறுவது தொடர்பில் ஆராய்ப்பட்டது.
முக்கியமாக திருகோணமலை மாவட்டத்தின் முதலீடுகளை கொண்டு அபிவிருத்தி செயற்பாடுகளை மேம்படுத்துவது போன்ற விடயங்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை, அடுத்தமாதம் நடைபெற இருக்கின்ற ஒலிம்பிக் போட்டிகளைக் கண்டுகளிப்பதற்காக, கிழக்கு மாகாணத்திலிருந்து பார்வையாளர்களை அழைத்துச் செல்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக செய்தியாளர்களிடம், முதலமைச்சர் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் மற்றும் முதலமைச்சரின் செயலாளர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .