Thipaan / 2016 ஜூலை 25 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாயில் ஐந்து புறாக்களைத் திருடிய இளைஞரொருவரை, அடுத்தமாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் எச்.ஜி.தம்மிக்க, நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) உத்தரவிட்டார்.
கந்தளாய் கோவில்கம பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் புறாக்கள் வளர்த்து வரும் நிலையில், கந்தளாய் நகரில் புறாக்கள் வளர்க்கும் மற்றொருவரின் ஐந்து புறாக்களைத் திருடி வைத்திருந்த நிலையில், புறாக்களின் உரிமையாளர் செய்த முறைப்பாட்டுக்கமைவே குறித்த சந்தேகநபரை சனிக்கிழமை (23) கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரை, கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (24) ஆஜர்படுத்திய போதே, விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
4 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago