Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மே 15 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1,100 பாலைமரக் குற்றிகள் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அரசாங்கத்துக்குச் சொந்தமான காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் வெட்டப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, குறித்த பகுதியில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துச் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது, மரங்களை வெட்டிக்கொண்டிருந்த சந்தேக நபர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் வெட்டப்பட்ட பாலைமரக் குற்றிகளை கைப்பற்றியுள்ளதாகவும் புல்மோட்டை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட மரக் குற்றிகளை புல்மோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .