Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஜூலை 25 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கதிரவன், பதுர்தீன் சியானா
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கௌரவித்து வெகுமதி வழங்கும் நிகழ்வு, திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில், ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்றது.
2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களைக் கண்டு பிடித்து சந்தேகநபர்களை கைதுசெய்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் 96 பேரே வெகுமதி வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
பொலிஸ் பொறுப்பதிகாரி மகேஷ் குமாரசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆர்.எச.நளின் பெரேரா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெகுமதிகளை வழங்கி வைத்தார்.
திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் சந்திரகுமாரவின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வு நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .