Gavitha / 2016 ஜனவரி 06 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.என்.எம்.புஹாரி
பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்பட்ட நபர், பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில், திங்கட்கிழமை (04) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பாரிஸ் என்ற நபர், தோப்பூரிலுள்ள அல்லை குளத்தில் குளித்துக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து, 2 அலைபேசிகள், மீள்நிரப்பு அட்டைகள், குறடு, ஸ்க்ரூ ட்றைவர், சிறிய கம்பித்துண்டுகள் போன்ற மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
தோப்பூர் பிரதேசத்தில் சில மாதங்களாக திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இதனால் சந்தேகத்துக்கிடமான முறையில் எவரும் நடமாடினால் உடனடியாக பொலிஸாருக்குத் தெரியப்படுத்தும் படி, பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டிருந்தனர்.
அதன் அடிப்படையில், நபரொருவர் தோப்பூர் அல்லை குளத்தில் குளித்துக்கொண்டிருந்த நபர் தொடர்பாக பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
இதன்பின்னரே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார் என்ற விடயம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது மூதூர் பொலிஸாரிடன் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்புடைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
14 minute ago
22 minute ago
31 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago
31 minute ago
43 minute ago