Princiya Dixci / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மூன்று இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த வாத்தியாகம பகுதியைச் 34 வயதுடைய நபரொருவரை, எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதவான் சானிக்கா பெரேரா, இன்று ஞாயிற்றுக்கிழமை (11) உத்தரவிட்டார்.
சந்தேகநபர், நகை வியாபாரம் மேற்கொள்வதற்காகப் பிரிதொரு நபரிடமிருந்த குறித்த பணத்தினைக் கடனாகப் பெற்றுத் தலைமறைவாக இருந்தநிலையிலே, கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் பணஉரிமையாளர் செய்த முறைப்பாட்டையடுத்து, சனிக்கிழமை (10) கைதுசெய்யப்பட்டார்.
சந்தேகநபரை, கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் இன்று (11) ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
22 minute ago
27 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
27 minute ago
4 hours ago