2026 மார்ச் 21, சனிக்கிழமை

பணியாளர்கள் மீது தாக்குதல்

Thipaan   / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை, மொறவெவ பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கலாசார மண்டபக் கட்டடத்தின் நிர்மாணப்பணிகளை மேற்கொள்வதற்காக வந்த பணியாளர்கள் மீது, இனந்தெரியாத நபர்களால், நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலில், மூதூர், பாலநகர் பகுதியைச் சேர்ந்த எம்.யூ.லரீப் (37 வயது) கே.எம்.நிப்ராஸ் (19 வயது) மற்றும் ஆர்.எம்.மாஹீர் (26வயது) ஆகியோரே படுகாயமடைந்து, மஹாதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

மொறவெவ பிரதேச சபையின்  கலாசார மண்டப நிர்மாணப் பணிகளாக வந்தவர்கள் அக்கட்டடம் நிர்மாணிக்கும் இடத்தில் தங்கியிருந்த வேளை,  மோட்டார் சைக்கிள்களில்  வருகை தந்த இனந்தெரியாத குழுவினர், மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர் யாராவது இருக்கின்றார்களா என கேட்டுவிட்டு சென்றுள்ளனர்.

பின்னர், அவர்கள் வருகை தந்த மோட்டார் சைக்கிளை பிரதான வீதியில் நிறுத்திவிட்டு, தாக்குதல் நடாத்தியதாக தாக்குதலுக்குள்ளானவர்கள் தெரிவித்தனர்.

தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X