2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பணம் திருடிய சந்தேகநபருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2017 ஒக்டோபர் 24 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சீனக்குடா பகுதியில் தேனீர் கடையொன்றினை உடைத்து பணம் மற்றும் சிகரட் புகைத்தல் வகைகளைத் திருடிய நபர் ஒருவரை இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க நேற்று(23) உத்தரவிட்டார்.                                   

மீன்பிடி கிராமம்,சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.                          

குறித்த சந்தேக நபர், சீனக்குடா பகுதியிலுள்ள தேனீர் கடையொன்றினை உடைத்து பதினைந்தாயிரம் ரூபாய் பணத்தினையும்,மூன்று பக்கட் சிகரட்,மற்றும் மூன்று பீடி வண்டல்கள் திருடியுள்ளதாக கடை உரிமையாரால் சந்தேக நபரின் நடமாட்டங்களின் அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X