Princiya Dixci / 2016 ஜனவரி 20 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
அனுமதியின்றி பத்து கிலோகிராம் பன்றி இறைச்சியையும் எட்டுக் கிலோகிராம் மரை இரைச்சியையும் வைத்திருந்த ஒருவரை, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவான் திஸாநாயக்க, நேற்று செவ்வாய்க்கிழமை (19) உத்தரவிட்டார்.
அக்போபுர பகுதியைச் சேர்ந்த முதியான்சலாகே ரஞ்சித் பண்டார (வயது 51) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்கஸ்வௌ காட்டுப்பகுதியில் வேட்டையாடி, விற்பனைக்காக இறைச்சிகளை மறைத்து வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சந்தேகநபரைக் கைதுசெய்ததுடன், இறைச்சிகளையும் கைப்பற்றியுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரை, திங்கட்கிழமை (18) மாலையில் கைதுசெய்து விசாரணைகளின் பின்னர் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
24 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago