Niroshini / 2016 ஜனவரி 03 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சசிக்குமார்
இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனம், மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தவும் அவர்களுக்கான நுட்பங்களை கற்றுக் கொடுப்பதற்குமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன் ஒரு கட்டமாக திருகோணமலை மாணவர்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை (07) காலை 8.30 மணி தொடக்கம் 4.00 மணிவரை பிரடறிக்கோட்டை 221வது இராணுவ படைமுகாமில் நடத்தப்பட உள்ளது.
திருகோணமலை பூப்பந்தாட்ட சங்கம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பங்கு கொள்ள விரும்பும் மாணவர்கள் பாடசாலை அதிபர்களின் சம்மதத்துடன் விளையாட்டு பொறுப்பாசிரியர்களுடன் இதில் கலந்து கொள்ள முடியும்.
13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு இதில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு பங்குபற்றுனருக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்படும். 100 பயிற்சியாளர்கள் மாத்திரம் இதில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.
இம்முகாமில் மாணவர்களுடன் பங்கு கொள்ளும் ஆசியர்களுக்கு பயிற்றுவிக்கும் நுட்பம், மத்தியஸ்தம் வகிக்கும் முறைகள் பற்றியும் விளக்கப்பட உள்ளதுடன் செய்முறை விளக்கமும் அளிக்கப்படும்.
திருகோணமலை பூப்பந்தாட்ட சங்கம் நடத்தும் 2016ஆம் வருடத்துக்கான சுற்றுப்போட்டி இம்மாதம் 09ஆம்,10ஆம் திகதிகளில் 5 பிரிவுளாக நடத்தப்படவுள்ளது. ஆண்களுக்கான தனி, இரட்டையர். பெண்களுக்கான தனி, இரட்டையர், 15 வயது ஆண்கள், என இப்போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்க விரும்புவோர் தமது விண்ணப்பங்களை எதிர்வரும் 08ஆம் திகதி மதியம் 12.00 மணி முன்னர் திருகோணமலை நீதிமன்ற வீதியில் அமைந்துள்ள பி.சி.ஹோம் கட்டட தொகுதியில் உள்ள அலுவலகத்தில் ஒப்படைக்கவும்.
8 minute ago
16 minute ago
25 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
25 minute ago
37 minute ago